ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2020 (16:27 IST)

மீண்டும் எப்போது அண்ணாத்த படப்பிடிப்பு? ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி!

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு பணிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள  ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்த நிலையில் படக்குழுவைச் சேர்ந்த 4 பேருக்குக் கொரோனா ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு அனைவரும் சென்னைக்கு திரும்பினர். இங்கு வந்த பின்னர் தேர்தலில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் அதற்கு முக்கியக் காரணம் தனது உடல்நிலைதான் எனக் காரணம் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாதியிலேயே விடப்பட்ட அண்ணாத்த திரைப்படம் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து ஊகங்கள் பலவாறாக சொல்லப்படுகின்றன. இப்போது இருக்கும் நிலைமையில் தமிழகத்தில் தேர்தல் முடியும் வரை மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்படாது என சொல்லப்படுகிறது. அதனால் தேவையில்லாத சலசலப்புகள் மற்றும் விமர்சனங்கள் எழும் என்பதால் தள்ளி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.