1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2020 (16:14 IST)

குச்சி ஐஸ் சாப்பிடும் அன்னலட்சுமி… பல வருடங்களுக்கு பிறகு வெளியான புகைப்படம்!

நடிகை அபிராமி நீண்ட நாட்களுக்குப் பின்னர் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழில் 2000களின் தொடக்கத்தில் பிஸியாக இருந்த நடிகை அபிராமி. அதையடுத்து அவரை தனது விருமாண்டி படத்தில் ஒப்பந்தம் செய்தார் கமல்ஹாசன். அந்த படத்தில் கமலோடு அவர் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார். அந்த படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றாலும், அதன் பின்னர் அவர் சினிமாவில் இருந்து காணாமல் போனார். அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து அவர் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தில் நடித்தார்.

இந்நிலையில் இப்போது மாதவன் நடித்துள்ள மாறா திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிரைலரில் அவர் இடம்பெற்றுள்ள காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.