திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2020 (15:57 IST)

தனுஷ் பட இயக்குநருக்கு கொரோனா உறுதி ! படக்குழுவினர் அதிர்ச்சி

தனுஷின் ‘’அந்தரங்கி ரே’’  பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். மேலும், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ், பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் , சாரா அலிகான் உள்ளிட்ட பிரபலங்களில் நடிப்பில் உருவாகிவரும் படம் அந்தரங்கி ரே. இப்படத்தை ஆனந்த் எல்.ராய் என்பவர் இயக்கிவருகிறார். இப்படத்தை கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து இப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறது.

விறுவிறுப்பாக இதன் படப்பிடிப்புகள் தமிழ்நாட்டு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த நிலையில்,  தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்தனர்.

இந்நிலையில், அந்தரங்கி ரே  பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். மேலும், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து வருகின்றனர்