புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 31 டிசம்பர் 2020 (16:32 IST)

தமிழகத்தில் கொரோனாகால ஊரடங்கு நீட்டிப்பு…தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாட்டுகளுடன்  வரும்  ஜனவரி 31 ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 1லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கல் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டாவது கட்ட அலைப்பரவல் கொரோனா உருமாற்றம் பெற்றுப் பலநாடுகளுக்குப் பரவிவருகிறது. இதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

எனவே, அடுத்தாண்டு ஜனவரி 2ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத் தலைநகரங்களில் 3 கட்டங்களாக தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் எனவும், கொரோனா தடுப்பு செலுத்துவதற்காக முன்னேற்பாடுகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் வரும்  ஜனவரி 31 ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் காணும் பொங்கலுக்கு கடற்கரையில் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தளர்வுகளின்றி தொடர்ந்து முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டும்.

திரையரங்குகளுக்கான கூடுதல் இருக்கைகளுக்கான அனுமதி 50% லிருந்து 100% எதுவும் தற்போது வெளியாகவில்லை.

கோவில் உள்ளிட்ட வழிப்பாட்டுப் பகுதிகளில் நேரக்கட்டுப்பாடு இன்றி வழக்கமான நேரங்கள் வழிபாடு தொடரும். மதச்சார்பு கூட்டங்கள் பொழுதுபோக்கு இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதி பெற்று நடத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா, சின்னத்திரை படப்பிடிப்பு தளங்களில் பணிபுரிவோன் எண்ணிக்கை உச்சவரம்பு எண்ணிக்கை தளர்த்தப்பட்டுள்ளது.