வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (22:21 IST)

நயன்தாராவிற்காக காத்திருக்கும் 'தளபதி 63' படக்குழு

விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்ப்பிடிப்பு சென்னை அருகே உள்ள பின்னி மில்லில் அதிரடி சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பில் விஜய், நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சியின் படப்பிடிப்பை நடத்த அட்லி திட்டமிட்டிருந்தார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக நயன்தாரா வேறு சில முக்கிய பணிகள் வந்துவிட்டதால் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை தள்ளி வைக்க அவர் கேட்டுக்கொண்டாராம். எனவே திட்டத்தை மாற்றிய இயக்குனர் அட்லி, இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் விஜய்யின் அறிமுகப்பாடலை தற்போது படமாக்கி வருகிறாராம்.

இந்த நிலையில் மார்ச் 11 முதல் நயன்தாரா, படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளதாகவும், அதில் விஜய், நயன்தாரா  சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என்றும் தெரிகிறது.

விஜய், நயன்தாரா, பரியேறும் பெருமாள்' கதிர், விவேக் , யோகிபாபு , தீனா , ஆனந்த்பாபு , டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.  ஏஜிஎஸ் நிறுவனம் தயாப்பில், விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் இவ்வாண்டு தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது