தொடர்புடைய செய்திகள்
- உலகக்கோப்பை 2019 ; இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்குமா ? – தாக்குதலால் குழப்பம் !
- கடன் தள்ளுபடி; காப்பீடு ! - உயிர் நீத்த வீரர்களுக்காக எஸ்.பி.ஐ. வங்கி எடுத்த அதிரடி முடிவு
- போர் ஒத்திகையில் இந்திய விமானப்படை: துல்லிய தாக்குதலுக்கு திட்டமா...?
- புல்வாமா எதிரொலி: பாக்கிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்க தடை!
- உயிரிழந்த அரியலூர் சிவச்சந்திரனின் குடும்பத்துக்கு நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் கூறி ரூ. 1லட்சம் நிதியுதவி
ரஜினி , அஜித் , விஜய் எல்லாம் எங்க போனாங்க ? தமிழக வீரர்களின் குடும்பத்தை நேரில் சென்று பார்த்த முதல் நடிகர்.!
ஜம்மு காஷ்மீர் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீர மரணத்தை தழுவிய 40 வீரர்களால் இந்தியாவே அதிர்ந்து போனது.
கடந்த பிப்ரவரி 14ம் தேதி வியாழனன்று புல்வாமா மாவட்டத்தில் இருந்து ஸ்ரீநகருக்கு துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ஜெய்ஷ்-இ-மொஹமத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்ததில் 40 இந்திய துணை ராணுவ பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த தூத்துக்குடி மற்றும் அரியலூர் மாவட்ட சிஆர்பிஎஃப் வீரர், சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரும் உயிரிழந்தனர். இந்த இரண்டு வீரர்களுக்கும் நடிகர் ரோபோ ஷங்கர் தலா ஒரு லட்சம் நிதியுதவி செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு வீடியோ பதிவிட்டார். அவரின் அந்த பரந்த மனப்பான்மையை பலரும் பாராட்டினர்.
இந்நிலையில் தற்போது அந்த இரண்டு குடும்பத்தையும் நேரில் சந்தித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும், சொன்னபடி இருவர் குடும்பத்திற்கும் தலா ஒரு லட்சம் அளித்துள்ளார்.
அஜித் , விஜய் , ரஜினி , கமல் போன்ற பெரிய நடிகர்கள் கூட பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்காத நிலையில் காமெடி நடிகர் ரோபோ சங்கர் செய்துள்ள இந்த செயல் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
