ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 பிப்ரவரி 2019 (19:29 IST)

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுதான்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த ஆண்டே 'விஸ்வாசம்' என்ற வெற்றியை தல அஜித்துடன் சேர்ந்து ருசித்த நிலையில் அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

குறிப்பாக நயன்தாரா நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள 'ஐரா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 28 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடித்த Mr.லோக்கல் திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக இரண்டு வேடங்களில் நயன்தாரா நடித்துள்ள 'ஐரா' படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சத்யராஜ், வரலட்சுமி நடித்த 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு  நயன்தாரா  நடிப்பில் உருவாகி வரும் 'கொலையுதிர்க்கலம், 'சயிர நரசிம்ம ரெட்டி, தளபதி 63 மற்றும் லவ் ஆக்சன் டிராமா ஆகிய படங்கள் வெளியாகவிருப்பதால் இந்த ஆண்டு நயன்தாரா நடித்த ஏழு படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது