1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (15:54 IST)

பள்ளி பாட புத்தகத்தில் விஜய் பட பாடல்! எந்த பாட்டுன்னு பாருங்க.!

குழந்தைகளின் பள்ளி பாட புத்தகத்தில் நடிகர் விஜய்யின் சினிமா பாடல் இடம்பெற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


 
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய்க்கு பெரியோர் முதல் சின்னஞ்சிறு குழந்தைகள் வரை ரசிகர்கள் இருக்கின்றனர். 90ஸ் மற்றும்  20ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகரான விஜய்யின் திரைப்பட பாடல் ஒன்று தமிழக அரசின் பள்ளி பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 
 
விஜய் ரசிகர்களுக்கு தங்களின் தளபதியை பற்றி ஒரு சிறு துரும்பு கிடைத்தாலே போதும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாட துவங்கி விடுவார்கள். இப்போது சொல்லவா வேண்டும்..? 
 
விஜய் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான அழகிய தமிழ்மகன் படத்தில் இடப்பெற்ற "எல்லா புகழும்" என்ற பாடல் தமிழக அரசின் பள்ளி பட புத்தகத்தில் இடம்பெறுள்ளது. முன்னாள் முன்னாள் முன்னாள் முன்னாள் வாடா என ஆரம்பிக்கும் இப்பாடல் குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு இடம்பெற்றிருக்கலாம் என விஜய் ரசிகர்கள் கூறி அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.


 


கவிஞர் வாலியின் வரிகளில் உருவான இப்பாடலுக்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.