வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (07:02 IST)

'தளபதி 63': அறிமுகப்பாடலில் குழந்தையாக மாறிய விஜய்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பின்னி மில்லில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் அட்லி, அதிரடி ஸ்டண்ட் காட்சியின் படப்பிடிப்பை முடித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது விஜய்யின் அறிமுகப்பாடல் படமாக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பாடலில் விஜய், 100 குழந்தைகளுடன் நடனமாடுவதாகவும், குழந்தைகளோடு குழந்தையாக அவர் நடனமாடும் காட்சி சூப்பராக வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் படப்பிடிப்பின் இடையே படப்பிடிப்பிற்காக வந்திருந்த குழந்தைகளுடன் விஜய் பேசி மகிழ்ந்ததாகவும், அவர்களுடன் செல்பி எடுத்ததாகவும் தெரிகிறது. விஜய்க்கு ஏற்கனவே குழந்தைகள் அதிகளவு ரசிகர்களாக இருந்துவரும் நிலையில் இந்த படத்தின் அறிமுகப்பாடலில் அவர் குழந்தைகளுடன் நடனம் ஆடியிருப்பது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.

விஜய், நயன்தாரா, பரியேறும் பெருமாள்' கதிர், விவேக் , யோகிபாபு , தீனா , ஆனந்த்பாபு , டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில்,  விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் இவ்வாண்டு தீபாவளி அன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.