1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (17:24 IST)

அஜித்தின் ’விடாமுயற்சி’ பட ஷூட்டிங் எப்போது? புதிய தகவல்

ajithkumar
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம்  நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை அடுத்து, அஜித்குமார் ஐரோப்பியா பைக் சுற்றுப் பயணம் செய்திருந்த நிலையில், இதை முடித்துக்கொண்டு அண்மையில் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்க, லைகா தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், அக்டோபர் முதல் வாரத்தில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.