வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (12:39 IST)

சூப்பர் ஸ்டார் காலில் விழுந்த அஜித்..புளூ சட்டை மாறன் பகிர்ந்த புகைப்படம் வைரல்

ajith- amithap bachan
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துவிட்டு, சமீபத்தில் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டார்.தற்போது, வட இந்தியாவில் ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தார்.

இது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்துகள் பதிவிட்டு வரும் சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் தன் டிவிட்டர் பக்கத்தில் அஜித், இந்தி சினிமாவின்  சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் காலில் விழுவது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில்,  ‘’அமிதாப் கலைத்துறையில் சீனியர், வயதில் பெரியவர், அஜித்தை வைத்து உல்லாசம் படமெடுத்த தயாரிப்பாளர். அந்த மரியாதைக்கு காலில் விழுந்து வணங்குகிறார்.

இதப்போயி கபாலி மேட்டரோட மேட்ச் பண்ணாதீங்க.

அஜித்தின் படங்கள் பிடிக்காமல் போகலாம். ஆனா தனிமனித ஒழுக்கத்துல அவருக்கு இணையான ஒரு முன்னணி ஸ்டார் இங்க கிடையாது.

கருப்பு பணத்தை பதுக்கறவங்களுக்கே இவ்வளவு கொழுப்பு இருந்தா.. நேர்மையா வரி கட்டுற இவருக்கு எவ்வளவு இருக்கும்?

ஆகவே.. Do not dare to touch Ajith on such issues.’’என்று தெரிவித்துள்ளார்.