வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (15:07 IST)

நடிகர் அஜித் கூட நடிக்க ஆசை- சூப்பர் ஸ்டார்

shiv rajkumar
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார்  சிவராஜ்குமார். இவரது ஒவ்வொரு படத்தையும் அங்கு ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வர்.

கடந்த 1986 ஆம் ஆண்டு சிங்கீதம் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர்  நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பது  மட்டுமின்றி, தயாரிய்பாளர்,   நடனக் கலைஞர் பின்னணி பாடகர் எனப் பன்முகக் கலைஞராக உள்ளார்.

சமீபத்தில், நெல்சன் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில், சிவராஜ்குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.  இந்த  நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில், தமிழ் சினிமாவில் எந்த நடிகருடன் நடிக்க ஆசை என்று  சிவராஜ்குமாரிடம் கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், 'அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசை' என்று  கூறி  அவரை பாராட்டியுள்ளார். 

இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.