வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (08:39 IST)

சூர்யா - விஜய் சந்திப்பில் நடந்தது என்ன?

சூர்யாவுடனான சந்திப்பின் போது சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படத்தை விஜய் பாராட்டினதாக தகவல். 

 
நடிகர் விஜய் மற்றும் நடிகர் சூர்யா ஆகிய இருவரும் நேற்று சன் நெட்வொர்க் அலுவலகத்தில் சந்தித்து கொண்டதாக கூறப்பட்டது. நடிகர் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துவரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் நடித்து வரும் நிலையில் இருவரும் சன் நெட்வொர்க் அலுவலகத்தில் சந்தித்து கொண்டதாகவும் இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டதாகவும் சன் நெட்வொர்க் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
இந்த சந்திப்பின் போது ஜெய் பீம் திரைப்படம் குறித்து சூர்யாவிடம் விஜய் பேசியதாகவும் பின்னர் இருவரும் இணைந்து மதிய உணவு சாப்பிட்டதாவும் தற்போதைய தகவல் வெளியாகியுள்ளது. இது தனிப்பட்ட சந்திப்பு என்பதால் புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.