1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (10:40 IST)

தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு!

தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு!
பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சித்ரா, திடீரென இன்று அதிகாலை தனியார் ஓட்டலில் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
சித்ரா தங்கியிருந்த அறையில் அவருடைய வருங்கால கணவர் தங்கியிருந்ததாகவும் அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் கடைசி இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் வீடியோ வெளிவந்துள்ளது 
நேற்றிரவு தனியா ஸ்டூடியோ ஒன்றில் படப்பிடிப்பில் இருந்த போது ஓய்வு நேரத்தில் அவர் எடுத்த ஒரு வீடியோவை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தான் அவர் பதிவு செய்த கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒரு சில நொடிகள் மட்டுமே தோன்றும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் சிரித்த முகத்துடன் அழகுடன் காட்சி அளிக்கும் சித்ரா தற்போது உயிருடன் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்