திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 9 டிசம்பர் 2020 (06:57 IST)

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை தற்கொலை!

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை தற்கொலை!
பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்பட பல சீரியல்களில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை சித்ரா திடீரென இன்று அதிகாலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சின்னத்திரை நடிகை சித்ரா சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்ததாகவும் இன்று அதிகாலை அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது 
 
பாண்டியன் ஸ்டோர் என்ற தொடரில் முல்லை என்ற கேரக்டரில் நடித்தவர் சித்ரா என்பதும் அவருக்கு மாபெரும் ரசிகர் கூட்டம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது