செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (16:49 IST)

ஒரே ஒரு போட்டோ போட்டதுக்கு இப்படியா? பிக்பாஸ் வேல்முருகனின் வீடியோ!

ஒரே ஒரு போட்டோ போட்டதுக்கு இப்படியா?
கிராமிய பாடகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவருமான வேல்முருகன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் திடீரென ரஜினியுடன் இணைந்து உட்கார்ந்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவு செய்து இருந்தார் 
 
ரஜினி அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்த ஒருசில மணி நேரங்களில் வேல்முருகன் இந்த புகைப்படத்தை பதிவு செய்து இருந்ததால், அவர் ரஜினியின் கட்சியில் சேரப்ப்போவதாக கூறப்பட்டது
 
இதுகுறித்து வேல்முருகன் விளக்கம் அளித்தபோது ’கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஜினியை நான் நேரில் சந்தித்த போது எடுத்த புகைப்படம் இது என்றும், அப்போது தான் குடும்பத்துடன் மனைவி குழந்தைகளுடன் ரஜினியை சந்தித்ததாகவும், அப்போது நான் அவருக்கு பல பாடல்களை பாடி காட்டியதாகவும் தெரிவித்தார்.
 
நேற்று அவர் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்ததை அடுத்து வாழ்த்து கூறுவதற்காக அந்த புகைப்படத்தை பதிவு செய்ததாகவும்  இந்த புகைப்படத்தை வைத்து தயவு செய்து வேறு கதைகள் கட்ட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்