புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (07:02 IST)

இந்தி-ஆங்கிலத்தில் டப் ஆகிறதா 'விவேகம்?

அஜித்தின் 'விவேகம்' திரைப்படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தபோதிலும் பாக்ஸ் ஆபீஸில் நம்பர் ஒன் என்பது நிரூபிக்கபட்டுவிட்டது. சென்னையில் இரண்டு வாரங்களில் ரூ.8.50  கோடி வசூலித்து பாகுபலி 2' படத்தின் ரூ.8.25 கோடி என்ற சாதனையை முறியடித்துவிட்டது



 
 
இந்த நிலையில் இந்த படத்தின் கான்செப்ட் இந்தி ரசிகர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்தியில் ரிலீஸ் செய்ய டப்பிங் வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளதாம். அதேபோல் ஹாலிவுட் தரத்தில் இந்த படம் இருப்பதால் ஆங்கிலத்திலும் டப் செய்யும் பணிகள் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்தியிலும் ஆங்கிலத்திலும் ரிலீஸ் ஆனால் இந்த படத்தின் வசூல் வேற லெவலில் இருக்கும் என்றும் அப்போது நெகட்டிவ் விமர்சனம் கொடுத்தவர்களே தங்கள் தவறை உணர்வார்கள் என்றும் படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.