'விஸ்வாசம்' நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் விஜய்சேதுபதி!

Last Modified திங்கள், 10 ஜூன் 2019 (19:28 IST)
தல அஜித், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த 'விஸ்வாசம்' திரைப்படம் சூப்பர்ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. இந்த படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் படம் வெளிவந்த ஒரே வாரத்தில் இந்த படம் ரூ.125 கோடி வசூல் செய்ததாக பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தற்போது கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு 'க/பெ ரணசிங்கம்' என்ற டைட்டிலை படக்குழுவினர் வைத்துள்ளனர்.
முழுக்க முழுக்க கிராமிய மண வாசனையுடன் உருவாகவிருக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். இருவரும் ஏற்கனவே 'பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, 'தர்மதுரை' ஆகிய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

விருமாண்டி என்பவர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் பணிபுரியும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், வரும் செப்டம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' திரைப்படம் வரும் 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :