புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 ஜூன் 2019 (17:43 IST)

கிரிஷ் கர்னாட்- கிரேசி மோகன் இணைந்து பணிபுரிந்த படம் எது தெரியுமா?

தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகின் பழம்பெரும் நடிகர் கிரிஷ் கர்னாட் மற்றும் தமிழ் திரையுலகம், நாடகவுலகின் ஜாம்பவான் கிரேஸி மோகன் ஆகிய இருவரும் இன்று ஒரே நாளில் மறைந்தது ஒட்டுமொத்த திரையுலகிற்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது. இவ்விருவருக்கும் திரையுலகினர் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றது
 
இந்த நிலையில் கிரிஷ் கர்னாட், கிரேஸி மோகன் ஆகிய இருவரும் 'ரட்சகன்' என்ற திரைப்படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளனர் என்ற ஆச்சரியமான செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்த படத்தில் கிரிஷ் கர்னாட் நாயகி சுஷ்மிதா சென் தந்தையாக நடித்திருப்பார். அதேபோல் கிரேஸி மோகன் இந்த படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். 
 
கிரிஷ் கர்னாட், கிரேஸி மோகன் இருவரும் இணைந்து பணிபுரிந்த இந்த ஒரே படத்தை இன்று கேடிவி ஒளிபரப்பி, சரியான நேரத்தில் சரியான வகையில் அஞ்சலி செலுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.