1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 10 ஜூன் 2019 (15:13 IST)

தளபதி 63-யில் விஜய் பெயர் மைக்கேல் இல்லையாம்! தர லோக்கலான பெயர்! இது தான்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.
 

 
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார்.
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். மேலும், விஜய் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராகவும்  நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் பெயர் மைக்கேல் என்று தகவல் வெளியாகி கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரலாக பரவி வந்தது.
 
இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் தளபதி 63 படத்தில் படத்தில் நடிகர் விஜய்யின் பெயர் மைக்கேல் இல்லை என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் "பிகில்" என்ற கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த பெயர் கேட்பதற்கு தர லோக்கலாக இருப்பதால் இவரது கேரக்டரும் அவ்வாறே இருக்குமோ என ரசிகர்கள் யூகித்து வருகிறார்கள். இருந்தாலும் இதை பற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளிவந்த பிறகே முழுமையாக நம்பமுடியும்.