செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2020 (17:57 IST)

விஷாலிடம் 45 லட்சம் திருடிய பெண்? காவல்துறையில் புகார்!

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பில்ம் பேக்டரியில் 45 லட்சத்தை அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணிபுரிந்த பெண் ஒருவர் கையாடல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் நடிகராக மட்டும் இல்லாமல் விஷால் பில்ம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் அவர் நடித்த ஆம்பள, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது சக்ரா மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.

இந்நிலையில் அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் 45 லட்சம் ரூபாயை களவாடியுள்ளதாக விஷாலின் மேனேஜர் அரி வடபழனி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த பணத்தை வைத்து அவர் வீடு ஒன்று வாங்கியுள்ளதாகவும் மேலும் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் கையாடல் செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக தற்போது விருகம்பாக்க காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.