1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 29 ஜூன் 2020 (20:46 IST)

மாஜிஸ்திரேட்டை விமர்சித்த புகார்: தூத்துக்குடி ஏஎஸ்பி, டிஎஸ்பி ஆஜராக உத்தரவு

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவரும் மாஜிஸ்ரேட்டை ஒருமையில் விமர்சனம் செய்ததாக ஏடிஎஸ்பி மற்றும் டிஎஸ்பி ஆகிய இருவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிவந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சாத்தான்குளம் போலீசார் காவலில் விசாரணை செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இதனை அடுத்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் என்பவர் சாத்தான்குளத்தில் தங்கி விசாரணை நடத்தி வந்தார்
 
இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் துறையினர் அவருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிகிறது. அது மட்டுமின்றி ஏடிஎஸ்பி மற்றும் டிஎஸ்பி ஆகியோர் அவரை ஒருமையில் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, ஏடிஎஸ்பி குமார் மற்றும் டிஎஸ்பி பிரதாபன் ஆகிய இருவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் இருவரையும் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர் இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது