1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 ஜூலை 2020 (11:38 IST)

புகார் கொடுக்க வந்த பெண் முன்பு சுயஇன்பம்! – காவலர் மீது அதிரடி நடவடிக்கை!

உத்தர பிரதேசத்தில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பெண் முன் ஆபாசமாக நடந்து கொண்ட காவலரின் வீடியோ வைரலான நிலையில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் டியொரியா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் சொத்து தகராறு சம்பந்தமாக அங்குள்ள பாட்னி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அவரது புகாரை விசாரித்த காவலர் பீஷ்ம் பால் சிங் என்பவர் விசாரித்து கொண்டே தனது அந்தரங்க பகுதிகளில் கையை வைப்பது, சுய இன்பம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

ஒவ்வொரு முறை அந்த பெண் காவல் நிலையம் வரும்போதும் பால் சிங் இவ்வாறாக ஆபாசமாக தன் முன் நடந்து கொண்டிருப்பதை பொறுக்க முடியாத அந்த பெண் ஒருநாள் காவல் நிலையம் சென்றபோது அவரது செய்கைகளை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதுகுறித்து டியோரியா மாவட்ட எஸ்.பி அவர்களிடம் அந்த பெண் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.

அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர் பீஷ்ம் பால் சிங் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதுடன், அவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் டியொரியா எஸ்.பி. காவலரின் இந்த தகாத செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.