புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2020 (23:40 IST)

’’இருவருக்கு’’ நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்’ – மாஸ்டர் பட நடிகை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்டதாக ஜெயராஜ், பென்ன்கிஸை போலீஸார் அழைத்துச் சென்ற நிலையில்  அவர்கள் இருவரும் மர்மமான முறையில் இறந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இருவரின் மரணம் இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது. இருவருக்கும் நீதி வேண்டும் என சினிமா பிரபலங்கள் முதற்கொண்டு அனைவரும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளதாவது :

தூத்துக்குடியில் ஜெயராஜ் மற்றும்  பெனிக்ஸ் ஆகிய இருவருக்கும் ஏற்பட்டுள்ள கொடூரத்தைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.  இப்படி கொடூரமாக நடந்து கொண்ட  காவல்துறையினரின் செயல் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது, மனிதாபிமானமற்றது என தெரிவித்துள்ளார்.