வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (13:03 IST)

அவருக்காக தாலி கட்டாமல் காத்திருந்த விஷாகன் ! நெகிழ்ந்த சௌந்தர்யா!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யாவிற்கு கடந்த பிப்ரவரி 10 ம் தேதி  சென்னை லீலா பேலஸில் பிரமாண்டமாக  திருமணம் நடைபெற்றது. 
 
இத்திருமணத்தில் தென்னிந்திய அரசியல், சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது, நடிகை கஜோல், தொழிலதிபர் முகேஷ் அம்பானி எனப் பல தேசியப் பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதே போல இந்த திருமணத்தின் போது சௌந்தர்யாவின் மகனிடம் விசாகன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. 


 
இந்நிலையில் தற்போது கணவர் விசாகன் மற்றும் தனது மகனுக்குண்டான பாசத்தை பற்றி நெகிழ்ந்துள்ளார் சௌந்தர்யா, மகன் வேத்வை விசாகனுக்கு மிகவும் பிடித்து போய்விட்டதால், இருவருமே நன்றாக பழக ஆரம்பித்தனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த திருமணத்திற்காக வேத்துவிடம் கூட விசாகன், "அம்மாவை திருமணம் செய்து கொள்ளலாமா" என்று கேட்டார். அதற்கு வேத் ஆம் என்று கூறினார் அந்த கியூட் வீடியோ கூட இருப்பதாக செளந்தர்யா கூறியுள்ளார். 
 
மேலும் திருமண நேரத்தில் வேத் அப்போது அருகில் இல்லை, உடனே விசாகன் வேத் வரும் வரை காத்திருக்கலாம் என்று தாலி கட்டாமல் காத்திருந்ததார் என கூறி நெகிழ்ந்துள்ளார் சௌந்தர்யா.