மேச்சிங் மேச்சிங்; செளந்தர்யா ரிசப்ஷனில் ரஜினி - தனுஷ் டிவின்னிங்!

Last Updated: செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (17:18 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் இரண்டாவது திருமணம் நேற்று (பிப்ரவரி 11) சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், நடிகர்களும் கலந்துக்கொண்டனர்.  
 
விழாக்கோலம் போன்று வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த திருமணத்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாக பரவியது. தற்போது செளந்தர்யாவின் ரிசப்ஷன் நிக்ழச்சியின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. 
 
இந்த புகைப்படங்களில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் மாமனாரும் மருமகனும் அதாவது ரஜினியும் தனுஷும் ஒரே மாதிரி டிசைன் மற்றும் கலர் கொண்ட உடைகளை அணிந்து கலக்கியுள்ளனர். 
 
தனுஷ் செளந்தர்யா திருமணத்திற்கு டேட்டாக வந்தார் குடும்பத்தினரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை என வந்த பல சந்தேகங்களுக்கு இருவரும் ஜாலியாக ஒரே மாதிரி உடை அணிந்து அனைவரின் வாயையும் அடைத்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :