வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 17 மார்ச் 2019 (11:00 IST)

இது தான் கடவுள் கொடுத்த வரம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் செளந்தர்யா ரஜினிகாந்த்!

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தனது கணவருடன் மகன் விளையாடும் கியூட் புகைப்படத்தைத் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 
 
கடந்த 11ம் தேதி  ரஜினி மகள் சௌந்தர்யா விசாகன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு தனது புதுமண வாழ்வை மீண்டும் தொடங்கினார். தற்போது இந்த தம்பதிகள் மகிழ்ச்சிகரமாக குடும்ப வாழ்க்கையைத் தொடங்கி உள்ள நிலையில் சௌந்தர்யா தனது டிவிட்டர் பக்கத்தில்  புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். 
 

அதில் செளந்தர்யாவின் கணவர் விசாகன், செளந்தர்யாவின் மகன் வேத் கிருஷ்ணாவுடன் மகிழ்ச்சியாக விளையாடுகிறார். அதனை புகைப்படமெடுத்து பதிவு செய்துள்ள செளந்தர்யா, 'இதுதான் கடவுளின் ஆசிர்வாதம், வரம் என்றும் இவர்கள் இருவரும் எனது உயிர்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.