திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 பிப்ரவரி 2019 (08:49 IST)

இணையத்தில் வைரலாகும் செளந்தர்யா ஹனிமூன் புகைப்படங்கள்

இயக்குனரும் ரஜினியின் இளைய மகளுமான செளந்தர்யா, தொழிலதிபரும் நடிகருமான விசாகன் என்பவரை பிப்ரவரி 11ஆம் தேதி திருமணம் செய்த நிலையில் தற்போது தம்பதிகள் இருவரும் ஐஸ்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.

இதுகுறித்து செளந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டபோது, 'மகன் வேத்-ஐ மிஸ் செய்வதாகவும் இருப்பினும் கடவுள் தனக்கு கொடுத்த அருமையான வாழ்க்கையை ரசித்து வாழ்வதாகவும், இனிமையான ஹனிமூனில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இருவரும் ஐஸ்லாந்து பனியில் இருக்கும் இரண்டு புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.

செளந்தர்யாவின் இந்த ஹனிமூன் புகைப்படங்கள் குறித்து ஒருசில டுவிட்டர் பயனாளிகள், 'நாட்டில் ஒரு துயரச்சம்பவம் நடந்து நாடே சோகத்தில் மூழ்கியுள்ளபோது ஹனிமூன் கொண்டாட்டத்தின் இந்த புகைப்படம் தேவையா? என்று கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் பெரும்பாலான டுவிட்டர் பயனாளிகள் செளந்தர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது