திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 மே 2022 (10:34 IST)

வீரன்ங்கள்லாம் சொல்றது… “பாத்துகலாம்”… இணையத்தில் வைரலான விக்ரம் டிரைலர்!

விக்ரம் படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘விக்ரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடந்தது.

முன்னதாக படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் கமல் ஆகியோரின் மாஸான ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியாகியுள்ள டிரைலர் ரசிகர்களின் ஆர்வத்தைப் பல மடங்கு எகிற வைத்துள்ளது.