1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 16 மே 2022 (08:15 IST)

மதுரை பின்னணியில் ஒரு படம்: கமலின் அடுத்த படம் குறித்து பா ரஞ்சித்!

pa ranjjith kamal
மதுரை பின்னணியில் ஒரு படம்: கமலின் அடுத்த படம் குறித்து பா ரஞ்சித்!
கமலஹாசன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தான் இயக்க இருப்பதாகவும் அந்த படம் மதுரை பின்னணியில் இருக்கும் என்றும் இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்
 
நேற்று சென்னையில் நடைபெற்ற விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா ரஞ்சித் கலந்து கொண்டார். அவர் பேசியபோது ’கமல்ஹாசனின் விருமாண்டி படம் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் கமல்ஹாசனை மதுரை பின்னணியில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று தனது நீண்ட நாள் ஆசை என்றும் விரைவில் அந்த ஆசை நிறைவேறும் என்றும் மதுரை பின்னணியில் கமல்ஹாசன் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்
 
மேலும் விக்ரம் படம் வெற்றிபெற தனது வாழ்த்துக்களையும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை பா ரஞ்சித் இயக்க உள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படம் மதுரை பின்னணியைக் கொண்ட படம் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது