வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 16 மே 2022 (10:04 IST)

‘அரசியலுக்கு வந்ததும் T ராஜேந்தர் செய்த செயல்’…. விக்ரம் ஆடியோ வெளியீட்டில் பகிரந்த கமல்!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

கமலஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘விக்ரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்வில் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர். விழாநாயகனான கமல்ஹாசன் தனது பேச்சில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் சிம்புவைப் பற்றி பேசும்போது “நான் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்ததும், வீடு தேடி வந்து என்னைக் கட்டிப்பிடித்து அழுதவர் TR. நீங்கள் எப்படி சினிமாவை விட்டு இருக்க முடியும் எனக் கேட்டார். அந்த கேள்விதான் என்னை மீண்டும் இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.