செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 மே 2022 (09:49 IST)

“விக்ரம் வாய்ப்பு வந்தது எப்படி ?”… ஆடியோ வெளியீட்டில் விஜய் சேதுபதி சொன்ன சீக்ரெட்!

விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கமலஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘விக்ரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது.

விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினர். படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி பேசும்போது “நான் முதலில் விக்ரம் படத்தில் இல்லை. ஆனால் இந்த படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என நினைத்தேன். என் கதாபாத்திரம் பல நடிகர்களுக்கு சென்று கடைசியில் நான் நம்பியபடி என்னிடமே வந்து சேர்ந்தது” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்திலும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.