செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2017 (22:11 IST)

விஷாலுக்கு கிடைத்தது அஞ்சலிக்கு கிடைக்கவில்லை!

விஷால், மோகன்லால் நடித்த 'வில்லன்' திரைப்படமும், ஜெய், அஞ்சலி நடித்த 'பலூன்' திரைப்படமும் இன்று சென்சார் செய்யப்பட்டது. வில்லன் படத்திற்கு 'யூ' சான்றிதழ் கொடுத்த சென்சார் அதிகாரிகள், அஞ்சலியின் 'பலூன்' படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர்.



 
 
இந்த நிலையில் 'வில்லன்' திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதூ. ஆனால் 'பலூன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்ற முடிவை பொருத்தே ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.
 
மேலும் வில்லன் திரைப்படம் மலையாள திரைப்படம் என்பதால் அந்த படம் ரிலீஸ் ஆவதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மோகன்லால், மஞ்சுவாரியர், விஷால், ஹன்சிகா, சித்திக் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.