விஷால் முடிவு எதிரொலி: மீண்டும் ரிலீஸ் ஆகும் 'விவேகம்
அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி வெளிவந்து கலவையான விமர்சனத்தையும் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது
இந்த நிலையில் வரும் 6ஆம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்று விஷால் அறிவித்துள்ளதால் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படங்கள் இல்லை. தற்போது கருப்பன் மற்றும் ஹரஹரமகாதேவி மட்டுமே ஓரளவுக்கு வசூலை கொடுத்து வருகிறது. அதுவும் இன்னும் இரண்டு நாட்களில் குறைந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் அஜித்தின் 'விவேகம்' படத்தை திரையிட ஒருசில திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த படம் வரும் 12ஆம் தேதி 50வது நாளை தொடுவதால் இந்த கொண்டாட்டத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாட ஒரு வாய்ப்பும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.