1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 4 அக்டோபர் 2017 (22:03 IST)

சிவாஜி மட்டும் மணிமண்டபம் போதும், தமிழ் சினிமாவுக்கு வேண்டாம்: விஷால்

தமிழக அரசு சமீபத்தில் திரைப்படத்துறையினர்களுக்கு விதித்த கேளிகை வரியால் ரொம்பவே அப்செட் ஆகியுள்ளனர் திரையுலக தயாரிப்பாளர்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத தயாரிப்பாளர் சங்கம் உடனே நேற்று ஆலோசனை செய்து வரும் 6ஆம்தேதி முதல் புதிய படங்கள் வெளியீடு இல்லை என்று அறிவித்துள்ளது.



 
 
இதுகுறித்து சற்றுமுன்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், 'மறைந்த சிவாஜி அவர்களுக்கு மணிமண்டபம் கட்டியது போதும், உயிரோடு இருக்கும் திரைத்துறையை சாகடித்து அதற்கும் மணிமண்டபம் கட்ட வேண்டாம் என்று வெறுப்பின் உச்சமாக பேசியுள்ளார்.
 
மேலும் திருட்டு விசிடி கடுமையாக இருக்கும் சூழலில் தமிழ் சினிமா 10% கேளிக்கை வரியால் தத்தளிக்கிறது. எங்களுடைய கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறோம். முதல்வரை சந்திக்க இன்று கடிதம் கொடுக்கவுள்ளோம்' என்றும் கூறியுள்ளோம்.
 
மேலும் திரைப்படத்துறை வளர வேண்டும் என்றால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றியது போல் இனிமேல் ஆட்சியையும் கைப்பற்ற வேண்டிய சூழல் ஏற்படும் என்று விஷால் தரப்பு கூறி வருகிறதாம்