வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (16:13 IST)

விக்ரம் தூக்கி எறிந்த பாலாவை …. முத்தமிட்டு அரவணைக்கும் மிஸ்கின் உருக்கம்!

சமீபத்தில் இயக்குநர் மிஸ்கின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், சசி, பாலாஜி சக்திவேல்,வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

அன்று இரவு தனது அடுத்த படமான பிசாசு -2 படத்தைப் பற்றியை அறிவிப்பை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு  மகிழ்ச்சியான அப்டேட் கொடுத்தார்.

இந்நிலையில், மிஷ்னின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா @bstudios_offl. 'பிசாசு 2' இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்கு சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களை பதிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கி வந்த வர்மா படத்திலிருந்து பாலா வெளியேற்றப்பட்டார். பின்னர் வேறு இயக்குநரை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வெளியிட்டார். இந்நிலையில் பாலாவுக்கு மிஸ்கின் பாராட்டியுள்ளார். மேலும் பாலாவின் அடுத்த படம் விரையில் வெளிவரவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.