ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (17:59 IST)

600 கிமீ., பைக்கில் பயணம் செய்த தல அஜித் ? வைரலாகும் தகவல்

ஹைதராபாத்தில் இருந்து சுமார் 600 கி.மீ., தூரத்தை நடிகர் அஜித் பைக்கில் பயணம் செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அத்தனை படங்களும் ஹிட் ஆனது. இந்நிலையில், அடுத்து இயக்குநர் ஹெச். வினோத்தின் இயக்கத்தில், வலிமை என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தினத்தன்று , ஹைதராபாத் விமான நிலையத்தில் தனது படக்குழுவினருடன் இருந்த அஜித், அப்போது போடப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, சுமார் 600 கிமீ தூரத்தை பைக்கிலேயே கடந்து வீடு வந்ததாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. மேலும் இந்த தகவலை ஒரு தனியார் செய்தி  நிறுவனம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல எனவும் ஒரு தகவல்  வெளியாகிறது.

ஆனால், நடிகர் அஜித்துக்கு நம்பத்தகுந்த வட்டாரங்கள், அஜித் பைக் பிரியர் என்றாலும் இவ்வளவு தூரம் மேற்கொள்வதில்லை எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.