வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 5 மே 2020 (22:34 IST)

தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல இயக்குநர்..

தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை நாள்தோறும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று மட்டும் 508 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4058ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 508 பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 279 பேர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2008ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மிழகத்தில் இன்று கொரோனாவுக்கு இருவர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது என்பதும், தமிழகத்தில் இன்று மட்டும் 11,858 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், மொத்தம் 174,828 பேர்களுக்கு  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 9615 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதில் சென்னையில் மட்டும் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3200 என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், சென்னையில் இருந்து தேனி வந்த இயக்குநர் பாரதிராஜா தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

மருத்துவ பரிசோதனையில் கொரோனா இல்லாத நிலையிலும் வெளியூரில் இருந்து வந்ததால் தனிமையில் இருக்குமாரு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.