வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (09:45 IST)

அஜித், விக்ரம் நடித்த படத்தின் ரீமேக்கில் முன்னணி நடிகர்கள்

அஜித், விக்ரம் இணைந்து நடித்த ஒரே படமான ‘உல்லாசம்’ திரைப்ப்படம் கடந்த 1997ஆம் ஆண்டு வெளிவந்தது. அமிதாப்பச்சன் தயாரித்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை
 
இந்த நிலையில் இந்த படம் தற்போது மீண்டும் ரீமேக் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதில் அஜித் நடித்த கேரக்டரில் விக்ரம் பிரபுவும் விக்ரம் நடித்த கேரக்டரில் துல்கர் சல்மானும் நடிக்கவிருப்பதாகவும், உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி-ஜெர்ரி இந்த படத்தை இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்றும், இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நடிக்கவிருப்பதாகவும் பெரும் பொருட்செலவில் இந்த படம் தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது
 
விக்ரம்பிரபு மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரும் இரண்டு பெரிய நடிகர்களின் வாரிசுகள் மட்டுமின்றி சிறுவயதில் இருந்தே நண்பர்கள் என்பதும் தற்போது முதல்முறையாக இருவர்ம் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது