பட்டி டிங்கரின் பார்த்து பக்காவா ரெடியான ஆதித்ய வர்மா: டிரெய்லர் இதோ...

Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (17:56 IST)
ஆதித்ய வர்மா திரைப்படம் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படமான வர்மா என்ற திரைப்படம் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகியது. 
 
ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர்களிடம் வர்மா படத்தை ரிலீஸ் செய்ய மறுத்ததோடு இந்த படத்தை வேறொரு இயக்குனருடன் ஒப்படைத்து மீண்டும் உருவாக்க கோரினார். இதனையடுத்து இந்த படம் கிரிசாயா என்ற இயக்குனரின் இயக்கத்தில் ஆதித்ய வர்மா என்ற டைட்டிலில் உருவாகி வந்தது. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மேலும், ஆதித்ய வர்மா திரைப்படம் நவம்பர் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். 
 
இதோ இந்த படத்தின் டிரெய்லர்... 


இதில் மேலும் படிக்கவும் :