விஜய் , அஜித் சொல்வது போல் இருங்கள் : சேரனுக்கு அட்வைஸ் செய்த விவேக் !

vijay
sinojkiyan| Last Updated: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (16:38 IST)
தமிழகத்தில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய  'பிக் பாஸ் சீசன் - 3' களைகட்டிய முடிவடைந்து விட்டது. பல களேபரங்கள் சர்ச்சைகளுக்கு பின் மக்களின் பொழுதுபோக்கு அம்சம் ஒன்று  குறைந்துள்ளது. 
இனி அடுத்த பிஸ் பாஸ் 4 எப்போது ? அதில் யாரெல்லாம் பங்குபெறுவார்கள் ? யார் தொகுத்து வழங்குவது ? என்பது போன்ற கேள்விகளை மக்கள் இப்போதே எழுப்பத் தொடங்கிவிட்டனர் மக்கள்.
 
இந்நிலையில், சமீபத்தில், பிரபல இயக்குநர்  சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டு பிரபலங்களை பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறார்.
 
அதில், 'கவின், லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை.அவசியமுமில்லை.
 
இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது. என் பிரச்னைக்கு வரவேண்டாம்.’ என தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில்,இதுகுறித்து நடிகர் மற்றும் சமூக ஆர்வலர் விவேக், இன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குநர் சேரனுக்கு அறிவுரையாக ஒரு டுவீட் பதிவிட்டிருக்கிறார். 
vivek
அதில் , சேரன் சார்! நீங்கள் மிக சிறந்த சமுதாய நோக்கம் உள்ள தேசிய விருது பெற்ற படைப்பாளி. ஆகவே விஜய் சொல்வது போல் “ ignore negativity”. அஜீத் சொல்வது போல் “ let go”. நல்ல கருத்தினை பதிவிட்டு அமைதி, ஆனந்தமுடன் இருங்கள். Peace to all. ✌️ என்று தெரிவித்துள்ளார்.
 
நடிகர் விவேக்கின் இந்த பதிவுக்கு சேரன் ரசிகர்கள் உட்பட பலரும் வைக்குகள் போட்டு வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :