சூர்யாவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு… எந்த படத்தில் தெரியுமா?
சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் பெரிய பில்டப்புகளுக்கு மத்தியில் ரிலிஸாகி படுதோல்விப் படமானது. சூர்யாவின் மூன்று ஆண்டுகால உழைப்பு வீணாக்கப்பட்டுள்ளது என அவரின் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். சூர்யா கடைசியாக திரையரங்குகளில் ஒரு வணிக ரீதியான வெற்றிப்படம் கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது எனப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்த படம் மொத்தமாக திரையரங்குகள் மூலமாக 100 கோடி ரூபாய் அளவுக்குக் கூட வசூலிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால் இப்போது சூர்யா குறுகிய கால படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இதன் பின்னர் அவர் வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களின் இயக்குனர் வெங்கட் அட்லூரியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவரும் சம்மதித்துள்ளதாகவும், விரைவில் இந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.