விஜய்யின் GOAT படத்தை முந்தும் அஜித்தின் குட் பேட் அக்லி.. ரிலீஸில் புதிய உச்சம்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. அஜித் மூன்று விதமான கெட்டப்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தைத் தமிழ்நாட்டில் பிரபல விநியோகஸ்தரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடுகிறார். இந்நிலையில் படத்தை சுமார் 1050 திரைகளில் இவர் வெளியியிடுகிறாராம். இதற்கு முன்னர் இவர் வெளியிட்ட விஜய்யின் GOAT படம் சுமார் 1020 திரைகளில் வெளியானதே இதுவரை சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.