வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (11:02 IST)

கலவையான விமர்சனங்களை பெற்று வரும் ‘தங்கலான்’.. தேறுமா?

Thangalaan
விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

படம் பார்த்த அனைவரும் பாராட்டுவது விக்ரம் நடிப்பை என்றும் அதனை அடுத்து பார்வதிக்கு சூப்பர் கேரக்டர் என்றும் ஜிவி பிரகாஷ் பின்னணி இசை தரமாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் பா ரஞ்சித்தின் திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்கிறது என்றும் குறிப்பாக முதல் பாதி சோதிக்கிறது என்று கூறியுள்ள ரசிகர்கள் படத்தின் வசனங்கள் சரியாக புரியவில்லை என்றும் ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் பேசும் வசனங்கள் கூட புரிகிறது, ஆனால் தமிழில் பேசும் வசனங்கள் பல புரியவில்லை என்றும் குறையாக கூறி வருகின்றனர்.

மேலும் பா. ரஞ்சித் இடமிருந்து இப்படி ஒரு படத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் படம் ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் விக்ரம் சூப்பர் ஆக நடித்துள்ளார் என்றும் ஒரு நடிகர் இவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒரு கேரக்டரில் நடிக்க முடியுமா என்று படம் பார்க்கும்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் பலர் விக்ரம் நடிப்புக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில் நடுநிலை சினிமா ரசிகர்களை இந்த படம் கவருமா என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும். 

Edited by Siva