வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (09:45 IST)

பைசன் படத்துக்குப் பிறகு தெலுங்கில் அறிமுகமாகும் துருவ் விக்ரம்…!

நடிகர் விக்ரம்மின் மகனான துருவ் ஆதித்யா வர்மா மற்றும் மகான் ஆகிய இரு படங்களில் நடித்து நல்ல அறிமுகத்தைப் பெற்றார். ஆனால் அந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய ஹிட்டடிக்கவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்காமல் துருவ் மிகப்பெரிய இடைவெளியை எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் இப்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன் –காளமாடன்” என்ற படத்தில் கபடி வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தென் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.

இந்த படத்தை முடித்தவுடன் துருவ் விக்ரம் அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.  ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அடுத்து துருவ் விக்ரம் தெலுங்கில் நாக சைதன்யாவோடு இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.