வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2024 (07:08 IST)

கதாநாயகனாக அறிமுகமாகும் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய் பிரபாகரன்!

கடந்த 1986ஆம் ஆண்டு ஆபாவாணன் தயாரிப்பில் ஆர்.அரவிந்தராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், கார்த்திக், அருண்பாண்டியன் சந்திரசேகர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் நடிப்பில் ஒரு த்ரில்லர் படம் உருவாகியது. பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய இந்த படம் தமிழின் மிகச்சிறந்த த்ரில்லர் படமாக கொண்டாடப்பட்டது

சமீபத்தில் விஜயகாந்த் மறைந்தது மிகப்பெரிய சோகத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனை கதாநாயகனாக்கி ஒரு திரைப்படத்தை ஆபாவாணன் உருவாக்க உள்ளாராம். இந்த படத்தில் விஜயகாந்தையும் ஏ ஐ தொழில் நுட்பம் மூலமாக உருவாக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அந்த படம் ஊமைவிழிகள் பார்ட் 2 ஆக இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகி சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.