வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 3 ஜனவரி 2024 (14:41 IST)

புத்தாண்டை டான்ஸ் ஆடி கொண்டாடிய அஜித்.. வைரலாகும் வீடியோ

அஜித்தின் 62ஆவது படமான விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்து வருகிறது. இதில்,   அஜித், திரிஷா, அர்ஜூன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
 
இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் கடந்த மாதம்தான் தொடங்கி தொடங்கி நடந்து வந்த நிலையில்,ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் , 2 வது  கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது.
 
இப்படத்தை அடுத்து, அஜித், மார்க் ஆண்டனி என்ற ஹிட் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்திற்கு அஜித் ரூ163 கோடியை சம்பளமாகப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், புத்தாண்டு தொடங்கியுள்ள   நிலையில், அஜித் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டான்ஸ் ஆடி புத்தாண்டை கொண்டாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.