1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2024 (18:49 IST)

இதையெல்லாம் விஜயகாந்திடம் கற்றுக் கொண்டேன்.- சசிகுமார்

sasikumar
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார்.

அவரது மறைவு, தமிழக அரசியலுக்கும், சினிமாத்துறைக்கும் பெரும் இழப்பு என்று அரசியல் தலைவர்களும், சினிமாத்துறையினரும்  இரங்கல் கூறினர்.

டிசம்பர் 29 ஆம் தேதி விஜயகாந்தின்  பூத உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்ப்பட்டது.

இந்த நிலையில், இன்று  சென்னை சாலிகிராமத்தில் உள்ள   விஜயகாந்த் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள  விஜயகாந்த் படத்திற்கு கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் தினமும்  அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் இன்று இயக்குனரும் நடிகருமான சசிகுமார் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைவையொட்டி அவரது இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகுமார் கூறியதாவது:

''கேப்டன் விஜயகாந்த் இழப்பு என்பது பேரிழப்பு. கேப்டன் விஜயகாந்த் அனைவருக்கும் ஒரேமாதிரி உணவு அளித்தாரோ அதேபோல் நான் நான் கம்பெனி ஆரம்பித்தபோதும் சொன்னேன். இதையெல்லாம் விஜயகாந்திடம் கற்றுக் கொண்டேன்.  கேப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால் முதலமைச்சராக இருந்திருக்கலாம். நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தவர் விஜயகாந்த்.  நடிகர் சங்க கட்டிடத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும். அவரது பெயரை வைப்பதில் தவறில்லை'' என்று தெரிவித்துள்ளார்.