திங்கள், 15 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (21:35 IST)

'விஜய்69 'படத்தை இயக்கும் ஹெச்.வினோத்...எப்போது பூஜை?

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் விஜய். சமீபத்தில் இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.
 
கட்சியை பற்றி அறிவித்தபோதே, நடிகர் விஜய் தனது ’விஜய்69 ’படத்தை முடித்திவிட்டு முழு நேரம் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார்.
 
அதனால் அவரது கடைசிப் படத்தை யார் இயக்குவது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
 
அதன்படி, அட்லீ, ஹெ.வினோத் உள்ளிட்டோரின் பெயர் அடிபட்டது. இந்த நிலையில், தீரன், சதுரங்க வேட்டை, வலிமை, துணிவு,  நேர்கொண்ட பார்வை ஆகிய ஹிட் படங்களை கொடுத்த ஹெ.வினோத் இப்படத்தை இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் 100 சதவீதம் உறுதிபடத் தகவல் வெளியாகிறது.
 
இந்த நிலையில், விஜய்யின் பிறந்த நாளில் விஜய்69 பட தொடக்கவிழா நடக்கும் எனவும், இந்தாண்டு இறுதியில் டிசம்பரில் ஷூட்டிங் முடிந்துவிடும். என கூறப்படுகிறது. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்த்தலுக்கு விஜய் தயாராகி வருவதால், இப்படம் வரும் 2025 வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.