ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2024 (15:40 IST)

3 முறை வெற்றி பெற்ற மத்திய சென்னை தொகுதி.. தயாநிதி மாறனுக்கு மீண்டும் வெற்றி கிடைக்குமா?

Dhayanithi Maran
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் மூன்று முறை தயாநிதிமாறன் வெற்றி பெற்றுள்ள நிலையில் நான்காவது முறையாக வெற்றி பெறுவாரா என்பது அந்த தொகுதி மக்கள் கையில் தான் உள்ளது.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் முக்கிய தொகுதிகளில் மத்திய சென்னையும் ஒன்று. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மற்றும் தயாநிதி மாறன் அதிக முறை இந்த தொகுதியில் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 1996 மற்றும் 1998 மற்றும் 1999 ஆகிய மூன்று தேர்தலில் முரசொலி மாறன் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் 2004, 2009 மற்றும் 2019 ஆகிய மூன்று முறை தயாநிதி மாறன் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து வினோத் செல்வம்  பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். மேலும் தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் கார்த்திகேயன் ஆகியோர்களும் இந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

மத்திய சென்னை என்பது திமுகவின் கோட்டை என்பது மட்டுமின்றி முரசொலி மாறன் தயாநிதி மாறன் ஆகிய இரண்டு பேரும் மூன்று முறை வெற்றி பெற்ற தொகுதி என்பதால் மீண்டும் தயாநிதி மாறான் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் வினோத் செல்வம் இந்த தொகுதியில் வளர்ந்து வரும் அரசியல்வாதியாக இருக்கிறார் இருப்பதால் அவர் கடும் சவாலாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

மத்திய சென்னை தொகுதியை பொருத்தவரை தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகேயன் ஆகிய இருவருமே தேர்தல் பிரச்சாரத்தில் காணப்படவில்லை என்று தான் கூறப்பட்டு வருகிறது.


Edited by Siva